காதலும் ஒரு கவிதை தானோ ?

காதலெனும் ஒரு கவிதை.... இணையத்தில் என் இதயத்தை வருடிய சில காதல் கவிதைகளின் குவியல்....

Google Search









என்னை
பைனாகுலர் பார்வை
பார்க்கின்றன
உன் மைனாகுலர் விழிகள்.

அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது.
ஆனால் நீ அடிப்பதே
அணைப்பது மாதிரிதான் இருக்கிறது.

உன்னை
எங்கெங்கெல்லாம் பார்க்கிறேனோ
அங்கெங்கெல்லாம்
நான் அப்படியே நிற்கிறேன்
இன்னும்.

என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக்கொண்டு
காமத்தை உதறிவிடுகிற
அதிசய அன்னம் நீ.

தபூ சங்கர்-

0 வாசகர் கருத்துக்கள்

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)